நுவரெலியா, டயகம நகரத்தில் இருந்து டயகம கிழக்கு தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதி கடந்த 30 வருடகாலமாக புனரமைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்துவதில் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.6000 குடும்பங்களை சேர்ந்த 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் குறித்த வீதியைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் மாணவர்கள், தொழிலுக்கு செல்பவர்கள், நோயாளர்கள் என பலரும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த விதியூடாக தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும் வீதி சீரற்றிருப்பதால் முறையான போக்குவரத்து இடம்பெறவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
2023 ஆம் ஆண்டு குறித்த வீதியின் புனர்மைப்புப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு கற்;கள் இடப்பட்டபோதும் இதுவரை எவ்வித பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
டயகம கிழக்கு பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 இற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.