டெங்கு காய்ச்சலால் 2 மாதங்களில் 7 பேர் பலி

0
88

கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 18 ஆயிரத்து 556 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் கடந்த 15 நாள்களில் மாத்திரம் 2 ஆயிரத்து 132 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.