டெங்கு காய்ச்சலின் புதிய பிறழ்வு நாட்டில் அடையாளம்: சுகாதார அமைச்சு!

0
198

டெங்கு காய்ச்சலின் புதிய பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனவே, காய்ச்சல் ஏற்படின் உடனடியாக மருத்துவரை நாடுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் கொழும்பு சீமாட்டிரிட்ஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளருமான விசேட மருத்துவ நிபுணர் ஜீ. விஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், டெங்கு நுளம்புகள் பரவாத வகையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக மக்கள் வைத்திருக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அல்லது காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.
இந்நாட்களில் வயதானவர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
தொண்டை வலி, காய்ச்சல், இருமல், சளி போன்றவை புதிய வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் என மருத்துவ நிபுணர் ஜீ. விஜயசூரிய தெரிவித்தார்.
வைரஸ் தொற்று குணமடைந்த பின்னரும் சிலருக்கு இருமல் நீடிக்குமாயின் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.