டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
78
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 83,000 கடந்துள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி குறித்த காலப்பகுதியில் 83,036 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 17,310 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல் மாகாணத்தில் மாத்திரம், மொத்தமாக 37,804 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.இந்நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்