டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
188

வாராந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1,500 வரை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. 

மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தை தவிர கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி ஆகிய மாவட்டங்களிலும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாவதாகவும் டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டார். 

டெங்கு, கொரோனா மற்றும் இன்புளுவென்சா போன்ற நோய்கள் தற்போது பரவி வருவதால், நோய்க்கான அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் உரிய மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.