இலங்கை இளைஞர்களுக்கு டென்மார்க்கில் தொழில் வழங்குவதாக கூறி தனது பெயருடன் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கருத்து வெளியிடும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த சம்பவத்தில் தான் எந்த வகையிலும் ஈடுபடவில்லை என்றும், டென்மார்க்கில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒவ்வொரு இளைஞர்களிடம் இருந்தும் தலா 600,000 ரூபா வசூலித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.“நீங்கள் இதில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என நான் நம்பவில்லை. எனினும், இந்த நாட்டின் இளைஞர்களிடம் இருந்து தலா ரூ.600,000 வசூலிக்கும் வேலைத்திட்டம் ஒரு குறிப்பிட்ட நபர் மற்றும் குழுவினரால் உங்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எனக் கூறிக்கொண்டு டென்மார்க்கில் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றது.எனவே, இது தொடர்பாக முறையான விசாரணை கோரப்படுகிறது,” என்றார்.