பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்தியக் குழாமிலிருந்து உபதலைவரான ஜஷ்பிரிட் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
2 போட்டிகளைக் கொண்ட குறித்த தொடருக்கான இந்தியக் குழாமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அண்மையில் வெளியிட்டிருந்தது. இதில் பும்ராவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் உபதலைவர் பதவிக்கு அவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பில் எவ்வித விளக்கத்தையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இதுவரை அறிவிக்கவில்லை.
இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தீர்மானம் பல்வேறான சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. போட்டிக்கு முன் இடம்பெறும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இவ்விடயம் பேசு பொருளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.