இங்கிலாந்தின் பல பகுதிகளில் குடியேற்றவாசிகளிற்கு எதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்ற நிலையில் டெஸ்ட் தொடருக்காக இலங்கை சென்றுள்ள கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.
முன்கூட்டியே இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை வீரர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்,தங்கள் சுற்றுப்பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் காணப்படுகின்ற போதிலும் முன்கூட்டியே சென்ற வீரர்களிற்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏழு வீரர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட இலங்கை குழுவினர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாங்கள் தங்கியிருக்கின்ற பகுதியில் வன்முறைகள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை என்ற போதிலும்,நாங்கள் கரிசனையடைந்துள்ளோம் என இலங்கை வீரர் ஒருவர் கிரிக்கின்போவிற்கு தெரிவித்துள்ளார்.
நாங்கள் இரவு நேர உணவிற்காக வெளியே செல்ல முடியாத நிலையில் இருக்கின்றோம்,ஹோட்டலிற்குள்ளேயே தங்கியிருக்கின்றோம்,நாங்கள் பிரச்சினையில் சிக்கிக்கொள்ளவோ தாக்குதலிற்குள்ளாகவோ விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.