அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
2023 ஜூன் 13 ஆம் திகதிக்கு பின்னர், டொலரின் நாணய மாற்று விகிதம் இன்று 300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295.57 ரூபாவாகவும், விற்பனை விலை 305.10 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.