மட்டக்களப்பு தரவைத் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி உடைக்கப்பட்டுள்ளது.

0
109

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி வாழைச்சேனை பொலிஸாரின் துணையுடன், வனஜீவராசிகள் திணைக்களத்தினால்
உடைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட தூபியே உடைக்கப்பட்டு, கட்டுமாணப் பொருட்களும்
வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் சட்டத்துக்கு முரணாக தூபி அமைக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால்
வாழைச்சேனை நீதிமன்றத்தில் கட்டளையை பெற்றுக்கொள்ளப்பட்டு, தூபி தகர்த்தெறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் சந்திவெளி பகுதியில் மாவீரர் தின ஆரம்ப நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் பெருமளவு பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டு நிகழ்வுக்கு தடையேற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தரவைத் துயிலுமில்லத்தில் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமை தொடர்பில், துயிலுமில்ல பணிக்குழுவினர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.