தபால் முத்திரையின் விலையை அதிகரிக்க தீர்மானம்

0
80

தபால் முத்திரை ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இதனை நடைமுறைபடுத்துவதற்காக திறைசேரி அனுமதிக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு வரை 15 ரூபாயாக இருந்த முத்திரையின் விலை தற்போது 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அஞ்சல் திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டம் அடைந்து வருவதனால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.