தமிழரசுக் கட்சியில் தற்போதுள்ள நிலைமைகள் மாற்றியமைக்கப்பட்டால் தமிழரசுக் கட்சியில் இணைவது பற்றி யோசிக்கலாம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் அருந்தபாலன் தெரிவித்தார்.
தமிழரசு கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தமிழரசு கட்சியில் இணைவீர்களா? என வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
தற்போதைய நிலையில் தமிழரசுக் கட்சியில் இணைவு பற்றி நான் கருத்துக்களை தெரிவிக்க விரும்பவில்லை
ஏனென்றால் நான் என்ன காரணத்துக்காக தமிழரசு கட்சியை விட்டு வெளியேறினேனோ அந்த நிலைமைகள் யாவும் தற்போதும் அப்படியே உள்ளது
தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரன் அவர்களினால் கட்சியில் தற்போதுள்ள நிலைமைகள் மாற்றியமைக்கப்பட்டு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறாக கட்சியின் நடவடிக்கைகள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக கட்சித்தலைமை மாற்றப்படுமாக இருந்தால் நான் மீண்டும் தமிழரசு கட்சியில் இணைவது பற்றி பரிசீலிக்கலாம்
எனினும் தற்போதுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியில் இணைவது தொடர்பிலான ஆர்வம் எனக்கில்லை எனவும் தெரிவித்தார்,,