28 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தமிழ்ச் சமூகத்துடன் பயணம் தொடரும் – உறுதி வழங்கிய கனேடியப் பிரதமர்

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டுவருவதாகவும் தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.

இதன் காரணமாகவே கனடா, சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து தமிழர் நலன் தொடர்பில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தைப்பொங் கல் நிகழ்வொன்றில் பங்கேற்றபோதே அவர் இந்த கருத்துகளை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

1983ஆம் ஆண்டு இலங்கையில் வன்முறைகள் ஆரம்பித்த காலத்தில் எனது தந்தையாரின் தலைமை யிலான லிபரல் கட்சி 1800 இலங்கை தமிழர்களை கனடாவில் குடியேற்றியது.

இந்த தொகை கடந்த பல தசாப்தங்களில் அதிகரித்து இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிக மாக வசிக்கும் நாடாக கனடா பார்க்கப்ப டுகிறது. அத்துடன் கனடாவின் வளர்ச்சிக்கு தமிழர்க ளின் பங்களிப்பு வியக்கத்தக்கது.

இதன் காரணமாகவே, 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தை தமிழர் வரலாற்று மாதமாக கனேடிய அரசாங்கம் பிரகடனம் செய்தது.

இலங்கை தமிழர்களின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கனடா தொடர்ந்தும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் ஏனைய அமைப்புகளுடன் செயற்பட்டு வருகிறது. அத்துடன் வேறு எந்த நாடும் நடைமுறைப்படுத் தாத வகையில் இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கனடா தடை விதித்துள்ளது. இந்த செயற்பாடுகள் தொடரும், தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்று கனேடிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles