தமிழர்கள் மீண்டும் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தும் நிலைமையினை ஏற்படுத்தாமல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு உறுப்பினர்களின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.