கொழும்பில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரசேங்களில் மீள் பதிவு நடவடிக்கை என கூறி பொலிசார் முன்னெடுக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகனேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. இதன் போது கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் பொலிஸார் நடந்துகொள்ளக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கட்டாய ஆட்பதிவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று மனோ கணேசன் எம்.பி. முன்வைத்த கேள்வியைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச தனது கருத்தை முன்வைத்தார்.
இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமாயின் அது தவறானது.
ஆட்களை பதிவு செய்யும் நடைமுறையொன்று உள்ளது. ,இந்த பதிவு முறைக்கு அவ்வாறான நடைமுறையையே பின்பற்றப்பட வேண்டும். அதற்காக பொலிஸ் முறையை பயன்படுத்தி அநீதி இழைக்கக் கூடாது
நாட்டின் தேசியப் பாதுகாப்பைப் போலவே குற்றங்களைக் குறைப்பதும் முக்கியம் என்றாலும்,ஏதேனும் நியாயமற்ற முறை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது.
எந்தவொரு வேலைத்திட்டத்திலும் வெளிப்படைத்தன்மையும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட வேண்டும்.