தமிழ் மக்கள் இளைஞர் அணியால் மட்டக்களப்பு வந்தாறுமூலை சக்தி பாலர் பாடசாலைக்காக, ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

0
132

தமிழ் மக்கள் இளைஞர் அணியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு வந்தாறுமூலை சக்தி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
பாடசாலையின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடை பெற்றது.
தமிழ் மக்கள் இளைஞர் அணியின் 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் மாவட்ட இணைப்பாளர் நிரோஜன் தலைமையில் இடம்பெற்ற கற்றல் உபகரணங்கள்
வழங்கும் நிகழ்வில், கண்ணகி வித்தியாலய அதிபர், பிரதேச சமூர்த்தி முகாமையாளர், வந்தாறுமூலை விஸ்ணு ஆலய குருக்கள் மற்றும் தமிழ் மக்கள் இளைஞர் அணியினர் என
பலர் கலந்து கொண்டனர்.