‘பார்வையற்றோருக்கு பாதை காட்டும் வெண்பிரம்பு’ எனும் தொனிப்பொருளில், சர்வதேச வெள்ளை பிரம்பு தினம், தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின்
தலைவவரும் பாடசாலை ஸ்தாபகருமான இதயராஜா தலைமையில் மட்டக்களப்பு கல்லடியில் இன்று நடைபெற்றது.
பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் கலந்துகொண்டார். மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், தரிசனம் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர் .
தரிசனம் விழிப்புலனற்றோர் பாட சாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச வெள்ளை பிரம்பு விழிப்புணர்வு நடைபவணி, கல்லடி – கல்முனை பிரதான வீதி ஊடாக விழா மண்டபத்தைச் சென்றடைந்தது.
அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் பிரதான நிகழ்வுகள் நடைபெற்றதோடு, தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களின்
கலை கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றன.