நாட்டில் நாளொன்றுக்கு அண்ணளவாக 145பேர் டெங்குநோயால் பாதிக்கப்படுவதாக சுகாதாரப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது. இதேவேளை, ஜூலை 28ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 04ஆயிரத்து 62 பேர் பாதிக்கப் பட்டுள்ளதுடன், குறித்த 28 நாட்களுக்குள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 04 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் ஜனவரி 01ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 13 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் இதுவரையான காலப்பகுதிக்குள் 32 ஆயிரத்து 301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.நாடுமுழுவதும் தற்போது மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில், டெங்கு நோய் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் 22 பிரதேச செயலகப் பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதாரப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்,
நாட்டில் இம்மாதம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 04ஆயிரத்து 62 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 03ஆயிரத்து 319 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அந்தவகையில் கடந்த மே மாதம் 02ஆயிரத்து 647 பேரும் ஏப்ரலில் 02ஆயிரத்து 234 பேரும் மார்ச்சில் 03ஆயிரத்து 615 பேரும் பெப்ரவரி மாதத்தில் 06ஆயிரத்து 07 பேரும் மற்றும் ஜனவரி மாதம் 10ஆயிரத்து 417 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் இதுவரை 12ஆயிரத்து 847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 07ஆயிரத்து 613 பேரும் கம்பஹாவில் 03ஆயிரத்து 453 பேரும் களுத்துறையில் ஆயிரத்து 781 பேரும் யாழ்ப்பாணத்தில் 04ஆயிரத்து 23 பேரும் கண்டியில் 02ஆயிரத்து 670 பேரும் குருநாகலையில் ஆயிரத்து 391 பேரும் புத்தளத்தில் 834 பேரும் காலியில் ஆயிரத்து 451 பேரும் கேகாலையில் ஆயிரத்து321 பேரும் இரத்தினபுரியில் 02ஆயிரத்து21 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.