திமிங்கல வாந்தியை (அம்பர்) விற்பனை செய்ய முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை (10) நீர்கொழும்பு – திவுலப்பிட்டிய வீதியிலுள்ள போமுகம்மன பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒரு கிலோ 200 கிராம் திமிங்கல வாந்தியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் கிரிந்திவெல, வதுருகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.
கைப்பற்றப்பட்ட திமிங்கலவாந்தி ஐந்து மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடையதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
திமிங்கலவாந்தியை வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது இலங்கையில் சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.