தியத்தலாவை விபத்து தொடர்பில் விசாரிக்க விசேட குழு

0
75

தியத்தலாவை – ஓட்டப் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரஷிக்க குமார டான் செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்

தியத்தலாவை -நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற ஃபாக்ஸ் ஹில் சூப்பர் கிராஸ் – 2024 ஓட்டப்பந்தயத்தின் போது இடம் பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காகவே குறித்த கு|ழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவ ஊடகப்பேச்சாளர் ,
ஃபாக்ஸ் ஹில் சூப்பர் கிராஸ் – 2024 ஓட்டப்பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு இராணவத்தளபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மேஜர் ஜனரல் ஒருவரின் தலைமையில்7 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்து.


குறித்த விசேட விசாரணை குழுவின் ஊடாக விபத்திற்கான காரணம் என்ன ? பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார் ? பந்தையத்தை பார்வையிட சென்றவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்ததா ? பந்தைய தளத்தின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் ? அவர்கள் உரியவாறு செயற்பட்டுள்ளனரா ? எதிர்காலத்தில் இத்தகைய வபிபத்து இடம்பெறுவதை எவ்வாறு தடுக்க முடியும் என்ற விடயங்கள் பல அந்மத குழுவின் ஊடாக ஆராயப்படவுள்ளது