தியவன்னாவ பாலத்திற்கு கீழ் இருந்து நீள் துப்பாக்கி மற்றும் ஏகே 56 ரக துப்பாக்கி ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த 13ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தினரிடம் இருந்து பறித்துச் சென்ற ஆயுதங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.