நில மீட்புக்கான செயற்றிட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நில உரிமை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
திருகோணமலை சர்வோதயம் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் அனுபவித்து வரும் காணிப் பிணக்கு தொடர்பான தெளிவூட்டல்கள், காணி பிணக்குக்கு தீர்வை பெறக் கூடிய வழிமுறைகள், காணி உரிமை தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.
அகம் மனிதாபிமான வள நிலையம் செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.
செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்தில் அதிக காணி பிணக்குகள் உள்ள மூதூர், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவைச் சேரந்த காணி உரிமைகளை இழந்தோர்,இளைஞர்கள்,சிவில் அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இப் பயிற் நெறியில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் அ.மதன் ,சட்டத்தரணிகள், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் உதவிக் கணக்காளர் கு.சஞ்சலிதா, கள இணைப்பாளர் சி.லீனா ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.