திருகோணமலை மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சுமுகமான முறையில் நடாத்துவதற்கு, சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக
மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
திருகோணலை மாவட்டத்தின் பொதுத்தேர்தல் நிலவரம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றையும் அவர் வழங்கியிருந்தார்.
ஆயிரத்து 667 பொலிசார் பாதுகாப்பு கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நிலையமாகவும், வாக்கெண்ணும் மத்திய நிலையமாகவும் திருகோணமலை விபுலானந்த கல்லூரி செயற்படுகின்றது.
மாவட்டத்தில் 318 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
வாக்கெண்ணும் மற்றும் வாக்களிப்பு நிலையங்களின் கடமைகளுக்காக 4ஆயிரத்து 666 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.