அநுராதபுரம் – திறப்பனை ஞானிக்குளம் பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததாக திறப்பனை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
சிவலாக்குளம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட குடும்பஸ்தர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் திறப்பனை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.