பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை ஒப்படைக்க வழங்கப்பட்ட கால அவகாசகத்தை நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தற்காப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மீள ஒப்படைப்பதற்கு நவம்பர் மாதம் 7 ஆம் திகதியுடன் முடிவடையும் ஒரு மாத கால அவகாசகத்தை அமைச்சகம் வழங்கியது.
இந்நிலையில், குறித்த கால அவகாசத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படும் எனவும், அவற்றை நவம்பர் மாதம் 07ஆம் திகதிக்கு முன்னர் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.
பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீளாய்வு செய்ததன் பின்னர், அவற்றை மீண்டும் வழங்க எதிர்பார்த்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
வெலிசறையில் உள்ள அரசாங்கத்தின் வணிக வெடிமருந்து களஞ்சியசாலையில் உரிய துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அனைத்து உரிமதாரர்களுக்கும் அறிவித்திருந்தது.