தென் கொரியாவில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி 160 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கந்தானை, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் குறித்த சந்தேகநபருக்கு எதிராக கிட்டத்தட்ட 20 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 5 இலட்சம் ரூபா தொடக்கம் 15 இலட்சம் ரூபா வரையான பணத்தைப் பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.