28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தென்னாபிரிக்க ஏ அணியுடனான முதல் டெஸ்டை வென்ற இலங்கை

தென்னாபிரிக்க ஏ அணியுடனான இரு போட்டிகள் கொண்ட 4 நாள் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை ஏ அணி 6 விக்கெட்களினால் இலகு வெற்றியீட்டியது. 

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் லங்கை எ அணி அங்கு தென்னாபிரிக்க ஏ அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை இலங்கை ஏ அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது. 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா ஏ அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி ஆடிய தென்னாபிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 372 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை ஏ அணி ஓசத பெர்னாண்டோவின் அபார சதம் மூலம் 323 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து 49 ஓட்டங்கள் முன்னிலையுடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்கா ஏ அணி 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அபாரமாக பந்துவீசிய இசித விஜேசுந்தர 34 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

174 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணிக்கு ஓசத பெர்னாண்டோ 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, 43.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இலங்கை வெற்றியிலக்கை அடைந்தது. 

இதன் மூலம் இலங்கை எ டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles