தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 86 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் சொகுசு கார் ஒன்று லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது.
கவனக்குறைவாக பயணித்த சொகுசு கார் ஒன்று கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது லொறியானது வீதியின் குறுக்கே குடை சாய்ந்துள்ளது.
மேலும், விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.