தெவிநுவர பெரஹராவில் பாகனை தாக்கியது யானை!!

0
12

தெவிநுவர எசல பெரஹரா ஊர்வலத்தில் திடீரென யானை குழப்பமடைந்து பாகனை தாக்கியதால் பதற்றமான சூழ்நிலை நேற்று திங்கட்கிழமை (04) இரவு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளியில்,

யானை திடீரென குழப்பமடைந்து பாகனை தாக்கிவிட்டு செல்கிறது. குழப்பமடைந்த யானையை ஏனைய பாகன்கள் அமைதிப்படுத்தி நிலைமையை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன.

அத்துடன்,  பெரஹராவைப் பார்வையிட நடைபாதைகளில் அமர்ந்திருந்த பொதுமக்கள் பீதியடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிச் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.