தேசிய கல்வி நிறுவகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலைய கல்விமாணி பட்டக்கற்கை நெறி மாணவர்களின் பட்டக்கற்கை நிறைவு நிகழ்வு

0
191

தேசிய கல்வி நிறுவகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலைய கல்வி மாணி பட்டக்கற்கை நெறி 2017-2020ஆம் கல்வியாண்டு ஆசிரிய மாணவர்கள் நடாத்தும்,
கல்வி மாணி பட்டக்கற்கை நிறைவு விழாவும் நிகம் -2 சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில்
இடம்பெற்றது.
கல்விமாணி பட்டக் கற்கை நெறி பிராந்திய கற்கை நெறி இணைப்பாளர் ஏ.எஸ்.யோகராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண
கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் கலந்து கொண்டார்.
நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக சிவஸ்ரீP கோ.கு.கிரிதரக் குருக்கள், அருட்தந்தை, பிறைனர் செலர் மற்றும் சிறப்பு அதிதிகளாக
ஓய்வு நிலை விரிவுரையாளர்கள், ஓய்வு நிலை அதிபர்கள் ,கல்வி திணைக்கள அதிகாரிகள் ,ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
நிகம்-2 சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதுடன், சஞ்சிகையின் நயவுரையினை கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் இன்பராசா வழங்கினார்.
ஓய்வு நிலை விரிவுரையாளர்கள், ஓய்வு நிலை அதிபர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டன.