நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய சாரணர் வார நிகழ்வு, இன்று, கிளிநொச்சி மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை, தேசிய சாரணர் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு, ஐந்து நாட்களும் வௌ;வேறு தொனிப்பொருள்களில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்றைய முதலாவது நாள், நட்பு என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு, மாவட்ட செயலகத்தில், கிளிநொச்சி மாவட்ட சாரணிய சங்க தலைவர் கி.விக்கினராஜா தலைமையில் இடம்பெற்றது.
இதில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளீதரன், பிரதம விருந்தினராக பங்கேற்று, சாரணர் வார நிகழ்வை ஆரம்பித்த வைத்தார்.
நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், மாவட்ட சாரணிய ஆணையாளர் சு.விக்கினேஸ்வரன், பாடசாலைகளின் சாரணிய பொறுப்பாசிரியர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.
சாரணர் வார நிகழ்வில், கிளிநொச்சி மத்திய கல்லூரி, திருவையாறு மகா வித்தியாலயம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம், வட்டக்கச்சி மத்திய கல்லூரி என 140 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த சாரணர் வாரத்தில், நட்பு, இளைஞர்கள், சமயம், சுற்றாடல், தொகை மதிப்பு என்ற தொனிப்பொருளில், விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.