தேசிய மக்கள் சக்தியினருக்கு நளின் பண்டார எம்.பி கடிதம் அனுப்பியுள்ளார்.

0
93

ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையிலான விவாததிற்கான திகதியை நிர்ணயித்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டு பிரதானியும் விவாத ஒருங்கிணைப்பாளருமான நளின் பண்டார எம்.பி தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு கடிதமொன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது அடிப்படை கோரிக்கையின் அடிப்படையில், இரண்டு விவாதங்களில் பொருளாதார விவாதத்தை முதலில் நடத்துவதும், தலைமைத்துவ விவாதத்தை இரண்டாவதாக நடத்துவது தொடர்பான எமது நிலைப்பாடு அவ்வாறே உள்ளது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். எனவே, எங்களால் பரிந்துரைக்கப்பட்ட திகதிகளில், பொருளாதாரக் குழு விவாதத்திற்கு நீங்கள் வழங்கும் திகதியை விரைவில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அவ்வாறு திகதியை வழங்குவீர்களானால், தொடர்புடைய இரு விவாதங்களுக்கான திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு மீண்டும் ஒருமுறை உங்களை அழைப்பு விடுக்கிறேன்.
நாங்கள் முன்மொழிந்த பொருளாதாரக் குழு விவாதத்தைப் எவ்விதத்திலும் பொருட்படுத்தாமல், அந்த விவாதத்தை திசை திருப்பும் வழக்கமான முயற்சியை கையாள்வதன் ஊடாக இரண்டு விவாதங்களையும் நடத்தாமல் இருப்பதற்கு நீங்கள்களம் அமைப்பதாகவே எம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது என்பதை வருத்தத்தோடு குறிப்பிடுகிறேன்.