தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படவேண்டும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

0
76

தேர்தலை பிற்போடுவதென்பது ஜனநாயக படுகொலைக்கு வழிவகுக்கும் எனவும் இரண்டு தேர்தல்களும் உரிய காலத்தில் நடத்தப்படவேண்டும் எனவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை பிற்பேடவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருக்கும் நிலையில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.