தேர்தல் தொடர்பான போலிச் செய்திகளை அடையாளங் காணல் மற்றும் தேர்தல் சட்டங்களின் அடிப்படையில் செய்திகளை அறிக்கையிடல் தொடர்பில்
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு ஒரு நாள் செயலமர்வொன்று நடாத்தப்பட்டது.
மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற செயலமர்வில், ஓய்வு பெற்ற உதவி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹமட் மற்றும் ஹாஸ்டேக் தலைமுறையின் திட்டமுகாமையாளர் கே.ஏ.எம்.சபீர் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினர்.
செயலமர்வில் மட்டு.ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் செ.நிலாந்தன், பொருளாளர் ஏ.கிருஸ்டிராஜ் உட்பட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.