தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பில், அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வு!

0
130

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பில், அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, தேர்தலுக்கான பணம் செலவிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும், குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஒரு தேர்தல் கூட நடத்தப்படாத காரணத்தினால், குறித்த சட்டத்தின் விதிகள் தொடர்பில், அரசியல்வாதிகளுக்கு உரிய புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்த, தேசிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.