27 C
Colombo
Tuesday, December 3, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தேர்தல் தினமன்று கடும் மழை பெய்யும் சாத்தியம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினமன்று கடும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பல மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.இதனால் சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை வரையறுக்கும் வகையிலான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அனர்த்த முகாமைத்துவ நிறுவனமும் தேர்தல் ஆணைக்குழுவும் கூட்டாக இணைந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் தினமன்று ஏற்படக்கூடிய எந்தவொரு அனர்த்த நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பகுதிகளில் காணப்படும் அரச நிறுவனங்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.தேர்தல் நடைபெறும் தினம் வடக்கு வடமத்திய வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles