தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – மே-30 முதல் இதுவரை 26 பேர் உயிரிழப்பு

0
136

மே 30ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மே மாதம் 30ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில், 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கிடையில் காணப்படும் தகராறுகள் காரணமாக இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை இறுதியாக இடம்பெற்ற சம்பவமாக
பதிவாகியுள்ளது.