செப்டம்பர் 22ஆம் திகதி முதல் ஆறு மாகாண ஆளுநர்கள் பதவி விலகுவதாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி (2403/05) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், தென் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் எரஞ்சன் திஸாநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ரவீந்திர அனுர விதானகமகே ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
2024 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மற்றும் நாட்டின் புதிய ஜனாதிபதியின் பிரகடனத்தைத் தொடர்ந்து ஆளுநர்கள் இராஜினாமா செய்தனர்.
