தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள கிராம சேவையாளர் சங்கம்

0
73

கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணக் கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிராம சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தீர்மானத்துள்ளது.

கிராம உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் போதுமானதாக இல்லை எனவும் பல தடவைகள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர்களுக்கான பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் , தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை விரைவில் அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .