இலங்கையிலுள்ள மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க முடிமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்குமென அவர் உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் உள்ள மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கிடைப்பதாகவும் நாட்கூலி முறைமையால் மக்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த முறைமைக்கு பதிலாக மற்றுமொரு முறைமை நிரந்தர தீர்வாக வழங்கப்பட வேண்டுமென தாம் வலியுறுத்தியுருந்த போதும், இது தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பின்னணியில், எதிர்வரும் 30 நாட்களுக்குள் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மலையக தமிழர்கள் தமது தேசிய அடையாளத்தை சனத்தொகை கணக்கெடுப்பின் போது மலையகத் தமிழர் என வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை உள்வாங்குவதற்கு ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.