29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘காஞ்சனா 4’ஐ கையிலெடுக்கும் ராகவா லோரன்ஸ்!

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கான ஆதரவு நீடித்துக்கொண்டிருக்கிறது என்பதை அண்மையில் வெளியான ‘அரண்மனை 4’ திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றி உறுதி செய்துள்ளதால், கட்டாய வெற்றியை வழங்க வேண்டிய சூழலில் இருக்கும் நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் ‘காஞ்சனா 4’ படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் என  உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ராகவா லோரன்ஸ் இயக்கத்தில் வெளியான ‘காஞ்சனா’ – ‘காஞ்சனா 2’ – ‘காஞ்சனா 3’ ஆகிய படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக பாரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் திரையுலக வணிகர்களின் விருப்பத்தை உணர்ந்த ராகவா லோரன்ஸ் ‘காஞ்சனா 4 ‘ படத்தின் பணிகளை தொடங்கி இருக்கிறார்.‌ இப்படத்தின் திரைக்கதை எழுதும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் ‘காஞ்சனா 4’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அதனை ராகவா லோரன்ஸ் தயாரிப்பதுடன், கதையின் நாயகனாக நடித்து இயக்கவிருக்கிறார் என்றும் பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.‌

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles