‘நல்லிணக்கத்திற்கு முழுமையாக மாறான செயற்பாடுகளை செய்து தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகிறது’-இரா.சாணக்கியன்

0
285

‘ஒருபுறம் சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை நாங்கள் சுபிட்சமான ஒரு நிலைக்கு கொண்டு செல்ல போகின்றோம் ‘ கூறிக்கொண்ட மறுபக்கம் நல்லிணக்கத்திற்கு முழுமையாக மாறான செயற்பாடுகளை செய்து தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்ற மாணவர்களுக்கும் க.பொத. உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் சதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஸ்தாபகர் கீர்த்திவர்மன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்
இரா.சாணங்கியன் ஆகியோருக்கு பாடசாலை அதிபரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் சாதாரண தர பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்ற 18 மாணவர்களுக்கு பணப்பரிசும், உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகம் தெரிவாகிய 5 மாணவர்களுக்கு மடிக்கணினியும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்