நவீன தொழில்நுட்ப உதவியுடன் வீரியமான நெல் நாற்று உற்பத்தி தொடர்பான பயிற்சி முகாம் மட்டக்களப்பில் நடைபெற்றது.

0
111

நஞ்சற்ற உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வீரியமான நெல் நாற்றுகளை உற்பத்தி செய்வதற்கான நாற்று மேடைகளை
தயார்ப்படுத்தல் தொடர்பில் மட்டக்களப்பு விவசாயிகளுக்கு பயிற்சி முகாமொன்று நடாத்தப்பட்டது.
கரடியனாறு விவசாய விரிவாக்கல் பிரிவின் கோப்பாவெளி போதனாசிரியர் பிரிவில் நடைபெற்ற பயிற்சி முகாம், கோப்பாவெளி போதனாசிரியர் பிரிவின்
முன்னோடி விவசாயியான ரோசனிற்குச் சொந்தமான விவசாய நிலம் பயன்படுத்தப்பட்டது.
மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் ,மாவட்ட விவசாய திணைக்களம் ,கரடியனாறு விவசாய ஆராய்ச்சி பிரிவு மற்றும் கிளிநொச்சி இந்திரா குழுமம் ஆகியவற்றால், மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கப் பிரிவு விவசாயப் பணிப்பாளர் பரமேஸ்வரனின் வழிநடத்தலில், பயிற்சி முகாம்
நடாத்தப்பட்டது.
மாவட்ட விவசாய உதவி பணிப்பாளர் எஸ்.சித்திர வேல், யாழ் பல்கலைக்கழக விவசாய விரிவுரையாளர் ரஜிதன், மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன தலைவர் ரமேஷ், பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலைய தொழிநுட்ப உதவியாளர் பிரதீபன் , கரடியனாறு கமநல சேவை நிலைய தலைவர் குணாநிதி மற்றும் முன்னோடி விவசாயிகள் , விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களும் பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர்.