நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுங்கோங் இன்று இலங்கை வருகிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வருகிறார். மார்ட்டின் சுங்கோங் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்க உள்ளார். அத்துடன் எதிர்கட்சி தலைவர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகின்றது.