நாடு முழுவதும் வாகனங்களைப் பயன்படுத்தி திட்டமிட்ட திருட்டுகளில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பல் 6 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை வடக்கில் உள்ள விற்பனை நிலையத்தில் நடந்த திருட்டு தொடர்பான விசாரணையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள பெட்டரி மற்றும் எரிவாயு விற்பனை மையங்கள் மற்றும் பல கடைகளில் இருந்து சுமார் 60 பெட்டரி மற்றும் 27 எரிவாயு சிலிண்டர்களை திருடப் பயன்படுத்தப்பட்ட வேனையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.