நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடகமுவ வெல்யாய பகுதியில் ஜீப் வண்டியொன்று, வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது காயமடைந்த சாரதி உள்ளிட்ட 9 பேர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 19 வயதுடையவர் எனவும், தொடகமுவ தோட்டம் பலாபத்வல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அநுரதபுரம் – பாதெனிய பிரதான வீதியின் உல்லலபொல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில், படுகாயமடைந்த இருவரில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் 28 வயதுடைய அம்பாறை, கொனாகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.