நாட்டின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி சாத்தியம்

0
135

ன்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.  

அத்துடன் மேல் மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யலாம்.

அவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.