தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.