நாட்டின் மின்சார நுகர்வு 20 வீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி!

0
164

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார நுகர்வு 20வீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தினசரி மின் நுகர்வு விகிதம் குறைந்தபட்சம் 48 மெகாவோட் எனவும், உச்சி நேரத்திற்கு 2 ஆயிரத்து 800 மெகாவோட் மின்சாரம் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களில், மின் நுகர்வு 38 முதல் 40 மெகாவோட் வரை இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
உச்சி நேரத்தில் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு 2 ஆயிரத்து 100 மெகாவோட்டாக குறைக்கப்பட்டது.
இது 20வீதம் குறைப்பை பிரதிபலிக்கிறது என ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.