நாட்டில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

0
140

இலங்கையில் காற்றின் தரம் சில பகுதிகளில் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் சேவை பிரிவு அறிவித்துள்ளது.

இன்றைய தினம் காற்றின் தரம் குறித்த சுட்டெண் சில பகுதிகளில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குறிப்பாக கண்டி, கேகாலை, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை ஆகிய பகுதிகளில் இவ்வாறு காற்றின் தரம் ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் காற்றின் தரம் சீராக காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.